போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் தூதுக் குழுவினர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

நவம்பர் 28, 2019

போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் திருமதி. மிவா கடோ அவர்கள் தலைமையிலான நான்கு உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர், பாதுகாப்பு செயலாளர்   மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி  யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி எம்பிள் அவர்களை இன்று (நவம்பர், 28) சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில் தூதுக்குழுவினர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கிடையே பயிற்சி மற்றும் ஒத்துழைப்புக்களை வலுப்படுத்தவது உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.