கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக துணைவேந்தர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
நவம்பர் 28, 2019ஜெனெரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக துணைவேந்தர் எயார் வைஷ் மார்ஷல் எச்.எம்.எஸ்.கே.பீ.கே. கொடகதெனிய அவர்கள் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி எம்பிள் அவர்களை இன்று (நவம்பர், 28) சந்தித்தார்.
பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையே சினேக பூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதன்போது கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக துணைவேந்தர் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு செயலாளருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும், இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.