பாதுகாப்பு செயலாளர் பிரதமருடன் சந்திப்பு

நவம்பர் 30, 2019

பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி  யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி எம்பிள் அவர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு கௌரவ. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை நேற்று மாலை (நவம்பர், 29) சந்தித்துள்ளார்.

அலரிமாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது, பிரதமர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையே தேசிய பாதுகாப்பு தொடர்பில் சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.

மேலும்,  இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் பாதுகாப்பு செயலாளரினால் கௌரவ. பிரதமர் அவர்களுக்கு நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.