பாதுகாப்பு அமைச்சில் 2019ஆம் ஆண்டுக்கான சம்பிரதாய பூர்வ புது வருட நிகழ்வுகள்
ஜனவரி 01, 2019மலர்ந்துள்ள புத்தாண்டை முன்னிட்டு அமைச்சில் இன்று (ஜனவரி, 01) காலை பாரம்பரிய நிகழ்வொன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
இதன்போது, அமைச்சின் வளாகத்தில் மகா சங்க உறுப்பினர்களால் மத அனுஷ்டானங்கள் மேற்கொள்ளப்பட்டபின்னர், அதனைத் தொடர்ந்து தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. அத்துடன் தாய் நாட்டின் சுபீட்சத்திற்காக உயிர்களை தியாகம் செய்த படைவீரர்களை நினைவு கூர்ந்து இரு நிமிட மௌனாஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், பாதுகாப்பு அமைச்சில் பணிபுரியும் அதிகாரிகளினால் சத்திய பிரமாணமும் எடுக்கப்பட்டது. அத்துடன் அனைவரும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிற்றுண்டி விருந்துபசார நிகழ்விலும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில், மேலதிக செயலாளர் (பாராளுமன்ற விவகாரம், கொள்கை மற்றும் திட்டமிடல்) திரு. பீ. ஆர். ராஜபக்ஸ, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, கடற்படை தளபதி, இராணுவ இணைப்பு அதிகாரி, அமைச்சின் கீழுள்ள நிறுவனக்களின் தலைமை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான அமைச்சின் பணியாளர்களும் கலந்துகொண்டனர்.