வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டாது - பாதுகாப்பு செயலாளர்
நவம்பர் 30, 2019வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டாது என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) WWV RWP RSP USP ndc psc MPhil அவர்கள் தெரிவித்தார்.
‘’ தேசிய பாதுகாப்பைப் பேணுவதற்கு அவசியமான பகுதிகளில் இராணுவ முகாம்கள் வைக்கப்பட வேண்டும் என்பது அரசாங்கத்தின் கருத்தாகும். எனவே, நாங்கள் எந்தவொரு தருணத்திலும் தேசிய பாதுகாப்பைக் குறைத்து மதிப்பிடமாட்டோம், மேலும் யாருடைய கோரிக்கைகளையும் நிறைவேற்ற இராணுவ முகாம்களை அகற்ற மாட்டோம். எந்த ஒரு இராணுவ முகாமும் எவரையும் பாதிக்காது’’ என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் குணரத்ன அவர்கள் அண்மையில் (நவம்பர், 30) தலதா மாளிகையில் புனித தந்ததாதுவை தரிசித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
வடக்குப் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இராணுவம் பல வழிகளில் உதவி வருகின்றது எனவும் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு எந்தவிதமான பாகுபாடும் இன்றி உதவ அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
“நாங்கள் மதம், சமூகம் அல்லது வயது ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவரையும் ஒரே மாதிரியாகக் கருதுகிறோம். அனைவருக்கும் சமமாக சேவை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் ’’ எனவும் அவர் குறிப்பிட்டார்.