பாதுகாப்பு செயலாளர் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் சந்திப்பு

டிசம்பர் 04, 2019

பாதுகாப்பு  செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன WWV RWP RSP USP ndc psc MPhil  அவர்கள்  பேராயர்  கர்தினால் மெல்கம்  ரஞ்சித் ஆண்டகை அவர்களை  இன்று ( டிசம்பர்,04) சந்தித்தார்.

இச்சந்திப்பு கொழும்பு பேராயர் இல்லத்தில்  இன்று காலை இடம்பெற்றது. இதன்போது, பாதுகாப்பு செயலாளர்  மற்றும்  பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோருக்கிடையில் பரஸ்பர  முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள்  குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றது.