இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தலைவராக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன கடமைகளை பொறுப்பேற்பு

டிசம்பர் 06, 2019

தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின்  தலைவராக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன அவர்கள்  தனது கடமைகளை இன்று  பொறுப்பேற்றுக்கொண்டார்.

“இந்த அரசாங்கம் நாட்டை சரியான அபிவிருத்தி பாதையில் இட்டுச்செல்லும் என மக்கள் பெரும் எதிர்பார்ப்புக்களுடன் உள்ளதாகவும் மற்றும் அவர்களது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையில் அரச பிரிவுகள் சிறப்பாக செயற்படவேண்டும்” எனவும்  தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தலைமையகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் அதன் பணியாளர்கள் மத்தியில் உரையாற்றும்போது  பாதுகாப்பு செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.

அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் கீழ் எமக்கு சிறந்த தலைமைத்துவம் ஒன்று  காணப்படுகின்றது. சிங்கப்பூர் தலைவர்கள் தங்கள் மக்களுக்கு தற்போது செயல்படுவதை விட அதிகமாக செயற்படுமாறு எப்போதுமே நினைவூட்டுவார்கள் எனவும், மக்கள் நாட்டுக்கு சேவையாற்றும் வகையிலும் அவர்களை தைரியப்படுத்தும் வகையிலும்  ‘Give little bit more’  எனும் வாசகத்தை பாரிய திரை மூலம் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் இங்கு தெரிவித்தார்.

நான் உங்கள் அனைவரிடமும் இன்னும் சற்று அதிகமாகவும் மற்றும் சிறப்பாகவும் செயல்படுமாறும் கேட்டுக்கொள்கிறேன். அரச துறை பணியாளர்கள் என்றவகையில் உங்கள்மீது பாரிய பொறுப்புக்கள் உள்ளதாகவும்  அதனால் நாட்டின் அபிவிருத்திக்கு மேலும் அதிகமாக தங்கள் சேவையை வழங்குமாறும்   மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன  அவர்கள்  கேட்டுக்கொண்டார்.

அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் கொள்கை திட்டத்திற்கமைய சிறந்த இலங்கை எனும் கருத்திட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு நாடுபூராகவும் 5ஜீ தொழிநுட்பத்தை  விரிவுபடுத்தவுள்ளது.

இங்கு வருகைதந்த பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரால் கமல் குணரத்ன அவர்களை  தொலைதொடர்புகளை ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் திரு. ஓஷாத சேனநாயக்க அவர்கள்  வரவேற்ற்றார்.