ரணவிரு சேவா அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்

டிசம்பர் 10, 2019

ரணவிரு சேவா அதிகார சபையின் புதிய தலைவராக ஒய்வு பெற்ற மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சில் வைத்து அவருக்கான நியமனக் கடிதத்தை இன்று (டிசம்பர் 10) பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன அவர்கள் வழங்கி வைத்தார்.