ஹருசமே எனும் ஜப்பானிய கடற்படை கப்பல் இலங்கைக்கு வருகை
டிசம்பர் 10, 2019ஜப்பானிய கடற்படைக்கு சொந்தமான “DD-102 ஹருசமே எனும் கப்பல் மூன்று நாள் நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு இன்றைய தினம் (டிசம்பர், 10) இலங்கையை வந்தடைந்தது.
திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை தந்த ஜப்பானிய கடற்படை கப்பலுக்கு இலங்கை கடற்பையினரால் கடற்படை மரபுகளுக்கு அமைவாக மரியாதை அணிவகுப்பு அளிக்கப்பட்டு வரவேற்கப்பட்டது.
இக்கப்பலுக்கு கொமாண்டர் ஓஷிமா தெருஹிசா அவர்களினால் கட்டளை வழங்கப்படுகின்றது.
151 மீட்டர் நீளத்தையும் 4550 தொன் கொள்திறன் எடையைக் கொண்ட. இக்கப்பலில் 165 கடற்படை வீரர்களுக்கான தங்குமிட வசதிகள் காணப்படுகின்றது.
இக்கபப்பலின் கட்டளைத் தளபதி மற்றும் இலங்கை கடற்படையின் கிழக்கு பிராந்திய பிரதி கட்டளைத் தளபதி கொமொடோர் சஞ்சீவ டயஸ் ஆகியோருக்கிடையே சந்திப்பொன்று இடம்பெற்றது. இச்சந்திப்பில் ஜப்பானிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் முதலாம் லெப்டினன் ககு புகோரா அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
கிழக்கு பிராந்திய கடற்படை கட்டளையகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் இரு நாடு கடற்படைகளின் ஒத்துழைப்பினை மேலும் வலுப்படுத்தும் விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
எதிர்வரும் வியாழக்கிழமை (டிசம்பர், 12) இந்நாட்டை விட்டு புறப்படவுள்ள இக்கப்பலின் வீரர்கள் இலங்கை கடற்படை வீரர்களினால் ஏற்பாடு செய்யப்பட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.