கடற்படையின் பச்சை நீல சுற்றாடல் பாதுகாப்பு கருத்திட்டத்திற்கு சீன தூதரகம் ஒத்துழைப்பு

டிசம்பர் 11, 2019

கடற்படையின் பச்சை மற்றும் நீல சுற்றாடல் கருத்திட்டத்திற்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில் சீன அரசினால்  இலங்கை கடற்படைக்கு 50  துவிச்சக்கர வண்டிகளும்  3 மின்சார வண்டிகளும்  நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. கடற்படை  தலைமையகத்தில் இன்று  இடம்பெற்ற வைபவத்தின் போது இப்பொருட்கள் நன்கொடையாக வழங்கிவைக்கப்பட்டன.

இந்நன்கொடை பொருட்களை  சீன தூதரகத்தின் கடல்  மற்றும் விமானப்படை பிரதி பாதுகாப்பு ஆலோசகர்  லெப்டினன்ட் கேணல்  சாங்குவான் ஜிங் அவரகள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா அவர்களிடம் கையளித்தார்.

சீன மக்கள் குடியரசினால் வழங்கப்பட துவிச்சக்கர மற்றும் மின்சார வண்டிகளை திருகோணமலை  கடற்படை இறங்குதுறை பிரதேசத்தில்  ஈடுபடுத்துவதற்கு  கடற்படை உத்தேசித்துள்ளது. திருகோணமலை கடற்படை இறங்குதுறை பிரதேசமானது கடற்படையினால் முன்னெடுக்கப்படும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு திட்டமான " நீல ஹரித சங்க்ராமய" திட்டத்தில் உள்ளடங்கும் பிரதேசம்  என்பது குறிப்பிடத்தக்கது.