பாதுகாப்பு அமைச்சின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்

டிசம்பர் 11, 2019

அரசாங்க அச்சகத்தினால் 2019.12.10ம் திகதி வெளியிடப்பட்டுள்ள 2153/12 ஆம் இலக்கம் என்ற வர்த்தமானி அறிவித்தலின் படி 31 அரச திணைக்களங்கள், நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ்  பட்டியலிடப்பட்டுள்ளன.

புதிய வர்த்தமானி அறிவித்தலின் மூலம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள 31 அரச திணைக்களங்கள் இநிறுவனங்கள் மற்றும் கூட்டுத் தாபனங்களின் விபரங்கள் பின்வருமாறு:-

1. பாதுகாப்பு படைகளின் பதவிநிலை பிரதம அதிகாரி அலுவலகம்
2. இலங்கை இராணுவம்
3. இலங்கை கடற்படை
4. இலங்கை விமானப்படை
5. இலங்கைப் பொலிஸ்
6. சிவில் பாதுகாப்புத் திணைக்களம்
7.அரச புலானாய்வு  சேவை
8. ரணவிரு சேவை அதிகார சபை
9. சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம்
10. பாதுகாப்புச் சேவைகள்  கட்டளை மற்றும் பதவிநிலை அதிகாரிகள்    கல்லூரி
11. பாதுகாப்புச் சேவைகள் பாடசாலை
12. தேசிய மாணவ (கெடெட்) படையணி
13. தேசிய பாதுகாப்பு நிதியம்
14. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம்
15. இலங்கை தேசிய பாதுகாப்புக் கற்கைகள் நிறுவனம்
16. இலங்கை கடலோரப் பாதுகாப்பு திணைக்களம்
17. லங்கா லொஜிஸ்ட்டிக்ஸ் லிமிட்டட்
18. ரக்னாஆரக்ஷன லங்கா லிமிட்டட்
19. தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை
20. குடிவரவூ மற்றும் குடியகல்வூத் திணைக்களம்
21. ஆட்பதிவூத் திணைக்களம்
22. ஊடகமத் தியநிலையம்
23. அரசசார்பற்ற அமைப்புக்களுக்கான செயலகம்
24. இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு
25. இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப  முகவர் நிலையம்
26. இலங்கை  கணினி அவசர பதில் நடவடிக்கைகளுக்கான ஒன்றியம்
27. அனர்த்த முகாமைத்துவ தேசிய மன்றம்
28. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்
29. தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம்
30. வளிமண்டலவியல் திணைக்களம்
31. தேசிய கட்டிடங்கள்ஆராய்ச்சிஅமைப்பு