கிளிநொச்சியில் சாலை விபத்துகளைத் தடுக்க பொலிஸாரினால் சிறப்புத் திட்டம்

டிசம்பர் 11, 2019

இரவு நேரங்களில் தெளிவாக  அடையாளக் காணத்தக்க வகையில் துவிச்சக்கர வண்டிகளுக்கும் டெக்டர்  வண்டிகளுக்கும் பளிச்சிடும் ஸ்டிக்கர்களை  ஓட்டும் நிகழ்வு அண்மையில் இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டது.

கிளிநொச்சி பிரிவில்  அண்மைக் காலமாக ஏற்படும் சாலை விபத்துக்களை குறைக்கும் வகையில் குறித்த  திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி  பிரதேசத்தில் துவிச்சக்கர  வண்டிகள் பிரபல்யமான போக்குவரத்து  சாதனமாகவும் டெக்டர்கள்  விவசாய  நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.

இதனால் துவிச்சக்கர வண்டிகளிலும் டெக்டர்களிலும் பளிச்சிடும் ஸ்டிக்கர்களை  ஒட்டுவதன்  மூலம்  இரவு வேலைகளின் போது ஏனைய  வாகன சாரதிகளினால் அடையாளங் காணப்பட்டு சாலை  விபத்துக்கள் தடுக்கப் பசுவதற்கு அவைகள் ஏதுவாக அமையும்.

குறித்த திட்டம் வரையறுக்கப்பட்ட மாஸ் இன்டி மேட் நிறுவனத்தின்  அனுசரணையுடன் கிளிநொச்சி  பிரிவு  பொறுப்பதிகாரி  பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த  ரத்நாயக்க  அவர்களின் தலைமையில்  இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.