பயங்கரவாதத்தையும் தீவிரவாதத்தையும் கட்டுப்படுத்துவதில் புலனாய்வு சேவைகள் முக்கியபங்குவகிக்கின்றன - பாதுகாப்பு செயலாளர்

டிசம்பர் 12, 2019

படைவீரர்கள், அங்கவீனமுற்ற வீரர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் மற்றும் குழந்தைகள் உட்பட அவர்களது குடும்பங்களின் நலனை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும்  தெரிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் வெளிவர முயற்சிக்கும் அதேவேளையில், தங்கள் மதத்தை தவறாகப் புரிந்துகொண்ட, தவறாக வழிநடத்தப்பட்ட இளைஞர்களின் ஒரு குழு, நாட்டில் அமைதியான சூழ்நிலையை சீர்குலைக்க முயற்சிக்கும் அதேவேளையில், நாட்டைப் பாதுகாக்கும் வகையில் அவைகள் குறித்த தெளிவான பார்வையை வைத்திருப்பதில் புலனாய்வு அமைப்புகளுக்கு முக்கிய பங்கு உண்டு என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்கள் தெரிவித்தார்.

முஸ்லீம் தீவிரவாதிகள் ஒரு குழு நாட்டில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது, அது நாட்டின் பொருளாதாரத்தை அழிக்கும் அதேவேளையில் சமூகங்களிடையே அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

இன்று யாழ் குடா நாட்டிற்கான தனது முதல் விஜயத்தை மேற்கொண்டார். இதன்போது அவர் யாழ்  பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டார். மேலும் அவர் அங்கிருந்த படையினர் மத்தியில்  உரையாற்றினார். இதன்போது  அவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்க முழுமையான விசாரணை அவசியமாகும் எனதெரிவித்தார்.

"இலங்கை ஒரு பௌத்தநாடாகும் அத்துடன் அனைத்து மக்களுக்கும் தமது சொந்தமதங்களை பின்பற்றக் கூடிய சுதந்திரம் காணப்படுகின்றது. மேலும் அனைத்து இனத்தவர்களும் மரியாதைடன் வாழக்கூடிய ஒரு உகந்த சூழலை உருவாக்குவது நமதுகடமையாகும்” என மேஜர்ஜெனரல் குணரத்ன தெரிவித்தார்.

மூன்று தசாப்தகாலமாக முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப்படைகளைச் சேர்ந்த படைவீரர்கள் பயங்கரவாதத்திற்கு எதிராக போரிட்டு தங்கள் உயிரைத்தியாகம் செய்து நாட்டில் அமைதியை ஏற்படுத்தியுள்ளனர். மேலும்12,000 க்கும் மேற்பட்ட முன்னாள் புலிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு மீண்டும் சமூகத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர் என அவர்கூறினார்.

முப்படடை மற்றும் பொலிஸாரின் நலன்குறித்து ஆராய அனைத்துநடவடிக்கை களையும் எடுத்துள்ளோம். எதிர்காலத்தில் எந்தவொரு அச்சுறுத்தலையும் சவாலையும் எதிர்கொள்ள அவர்களுக்கு நாங்கள் பயிற்சி அளிக்கிறோம்.


பலத்த காயமடைந்து அங்கவீனமுற்ற போர்வீரர்களை அரசாங்கம் கவனிக்கும். அவர்களின் குடும்பங்கள், குறிப்பாக பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோரின்  வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கான ஆதரவை வழங்குவதையும் நாங்கள் உறுதி செய்வோம், மேலும் போர்வீரர்கள் தங்கள் கண்ணியத்தை பேணிக்கொள்ள  வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இங்குகருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல் (ஓய்வு) ‍ கமல் குணரத்ன அவர்கள், ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அவர்களினது தூரநோக்கினை பின்பற்றி, அமைதியை ட்டெடுப்பதற்காக நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாக்க தங்கள் உயிரையும் அவயவங்களையும் தியாகம்செய்த வீரர்களை மக்கள் மதிக்கும் சூழலை உருவாக்க போர் வீரர்கள் சிறந்த முறையில் பேணப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டார்.

இன்று காலை வடகுடாநாட்டிற்கு தனது கன்னி ஜயத்தை மேற்கொண்டு பலாலி விமான நிலையத்திற்கு வருகைதந்த பாதுகாப்பு செயலாளரை பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி மற்றும் முப்படைகளின்  தளதிகள் ஆகியோர் வரவேற்றனர்.

போர் வீரர்கள் நினைவுத் தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்திய பின்னர், மேஜர் ஜெனரல்  (ஓய்வு)  கமல் குணரத்ன அவர்கள் யாழ்  பாதுகாப்புப்படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்தார். அங்கு ருகைதந்த பாதுகாப்பு செயலாளரிற்கு மரியாதை அணிவகுப்பு அளிக்கபட்டது.

இராணுவ மரபுக்களுக்கமைவாக செயலாளர் தனது வருகையை குறிக்க ஒரு மரத்தை நட்டதுடன், பாலாலி இலங்கை விமானப்படை தளத்தில் குழுமியிருந்த 3,000 க்கும் மேற்பட்ட படை  வீரர்கள் மத்தியில் உரையாற்றினார்.

பாதுகாப்பு செயலாளர் வட பிராந்தியத்திற்கான தமது விஜயத்தின் போது யாழ் பாதுகாப்புபடை தலைமையகத்தில் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் காங்கேசன்துறையில் உள்ள கடற்படை கட்டளையத்திற்கும் விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது.