ஜனாதிபதியின் பெயரை பயன்படுத்தி மோசடி மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவர்கள் தொடர்பில் தகவல் தெரியுமாயின் உடனடியாக அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் வேண்டுகோள்
டிசம்பர் 16, 2019ஊடக அறிக்கை
ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் அல்லது ஜனாதிபதியுடன் நெருக்கமான தொடர்பு உள்ள நபர் எனக் கூறி பல்வேறு விதத்தில் பொது மக்களை ஏமாற்றி மோசடி நடவடிக்கைகளில் ஈடுப்படல் மற்றும் மக்களுக்கு சட்டவிரோதமான முறையில் அழுத்தம் கொடுத்த நபர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்ற வண்ணம் உள்ளன. எனவே இது போன்ற மோசடி நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுவரும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் தலைமையகம் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
இதற்கமைய மேற்குறிப்பிட்ட விதத்தில் மோசடி அல்லது சட்ட விரதமான முறையில் அழுத்தங்களுக்கு உள்ளாகியிருந்தால் அல்லது இது போன்று ஏதாவது மோசடியில் ஈடுப்பட்ட நபர்கள் தொடர்பில் தகவல்கள் தெரியுமாயின் கீழ்குறிப்பிடப்பட்டுள்ள தொலைப்பேசி இலக்கங்கள் ஊடாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு தெரியபடுத்துமாறு பொது மக்களை கேட்டுக் கொள்கின்றம்.
பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் மூலம் பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு தகவல்களை வழங்க முடியும்,
• சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் - மேல் மாகாணம்
தேசபந்து தென்னகோன் - 0718591017
• சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் - வட மாகாணம்
ரவி விஜேகுணவர்தன - 0718591009
• சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் - மத்திய மாகாணம்
எஸ்எம் விக்ரமசிங்க - 0718591001
• சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் - தென் / சப்ரகமுவ மாகாணம்
ரொஷான் பெர்ணான்டோ - 0718591028
• சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் - வட மத்திய / வட மேல் மாகாணம்
நந்தன முனசிங்க - 0718591008
• சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் - ஊவா மாகாணம்
டப்.எப்.யு. பெர்ணான்டோ - 0718591011
• சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் - கிழக்கு மாகாணம்
லலித் பதினாயக்க - 0718591985
கொழும்பு நகர் பகுதியில் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் தொடர்பாக தகவல் தெரியுமாயின் கீழ் குறிப்பிடப்படும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்
பணிப்பாளர் - கொழும்பு மோசடி தடுப்பு விசாரணை பிரிவு
பொலிஸ் அத்தியட்சகர் – டப்.எல்.ஜே. ரஸ்ஸல் டி சொய்சா
தொலைபேசி இலக்கம் :- 0718591736
நாட்டின் எந்தவொரு பகுதியில் இருந்து குறித்த நபர்கள் தொடர்பாக தகவல்களை வழங்கமுடியும்.
i. 119
ii. பொலிஸ் மா அதிபர் கட்டளையிடும் தகவல் மையம் - கடமை அதிகாரி
தொலைபேசி இலக்கம் :- 011 – 2854885