பாதுகாப்பு அமைச்சு - ஊடக மையத்தின் புதிய பணிப்பாளராக பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க அவர்கள் பொறுப்பேற்பு

டிசம்பர் 18, 2019

• இராணுவ ஊடக பேச்சாளராகவும் இராணுவ ஊடக பணிப்பாளராகவும்  பொறுப்பேற்பு

பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தின் புதிய பணிப்பாளராக பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க அவர்கள் இன்று  தனது கடமைகளை  பொறுப்பேற்றுக்கொண்டார். கொழும்பு 03, கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள  பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் இடம்பெற்ற  விஷேட வைபவத்தின் போதே தமது கடமைகளை பொறுப்பேற்றுகொண்டார்.

புதிய பணிப்பாளர் தமது கடமைகளை பொறுப்பேற்கும்  நிகழ்வுகள்  மகாசங்கத்தினரின்  "பிரித்"  பாராயணத்துடன் ஆரம்பமானது.

புதிதாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட பிரிகேடியர் விக்ரமசிங்க அவர்கள் இதற்கு முன்னர் தென் கொரிய தேசிய பாதுகாப்பு கல்லூரியில் தமது கற்கை நெறியினை மேற்கொண்டார். 1989ம் ஆண்டில் இலங்கை இராணுவத்தின் நிரந்தர சேவையில் இணைந்து முப்பது வருடங்களுக்கு மேல் தமது இராணுவ சேவைக் காலத்தைக்கொண்ட பிரிகேடியர் விக்ரமசிங்க அவர்கள் பல பதவிநிலை கட்டளை பதவிகளை வகித்துள்ளார்.