இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பிர் சிங் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன அவர்களுடன் சந்திப்பு

டிசம்பர் 19, 2019

இந்திய  கடற்படைத் தளபதி  அட்மிரல் கரம்பிர் சிங் அவர்கள் பாதுகாப்பு செயலாளர்  மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன அவர்களை இன்று (டிசம்பர்,19 ) சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில் இந்திய  கடற்படைத் தளபதி  அட்மிரல் கரம்பிர் சிங் மற்றும்  பாதுகாப்பு செயலாளர்  மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன ஆகியோரிடையே  பிராந்திய கடல்வழி பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல், பயிற்சி ஒத்துழைப்புகள், போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் உள்ளிட்ட சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகளை குறைத்தல், ஏனைய கடல்சார் விடயங்கள், தகவல் பகிர்வு மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட இருதரப்பு நலன்கள்  குறித்து கலந்துரையாதப்பட்டன.

மேலும், அப்போதைய அரசாங்கத்தினால்  பயங்கரவாதம் முறியடிக்கப்பட்ட முறை,  நாட்டிலிருந்து பயங்கரவாத அச்சுறுத்தலை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து  பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) குணரத்ன அவர்கள்  அட்மிரல் கரம்பீர் சிங் அவர்களுக்கு   சுருக்கமாக விளக்கமளித்தார்,

மேலும். அண்டை நாடுகள் என்ற வகையில்  எதிர்கொள்ளும் பொதுவான அச்சுறுத்தல்கள் தொடர்பில்  இரு நாடுகளுக்கும் இடையில் தகவல் பகிர்வின் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடல்சார் பிரச்சினைகளை தீர்ப்பதில் இரு நாடுகளுக்குமிடையில் சிறந்த ஒத்துழைப்பு மற்றும் ஈடுபாட்டின் அவசியத்தையும் பாதுகாப்பு செயலாளர் இதன் போது வலியுறுத்தினார்.

கலந்துரையாடலின் முடிவில் இந்  நிகழ்வை நினைவு கூறும்  வகையில்  பாதுகாப்பு செயலாளர் மற்றும்  அட்மிரல் கரம்பீர் சிங் ஆகியோருக்கிடையில்   நினைவு சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டது.

நான்கு நாள் உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் அவர்கள்  எதிர்வரும் சனிக்கிழமையன்று திருகோணமலையில் உள்ள கடற்படை மற்றும் கடல்சார் அகடமியில் இடம்பெறவுள்ள 60வது ஆட்சேர்ப்பின்  ஊடாக  பயிற்சிகளைப் பெற்று மிட்ஷிப்மென்களாக  வெளியேறும் கடற்படை அதிகாரிகளின் பிரியாவிடை அணிவகுப்பு மரியாதை  நிகழ்விலும் பங்கேற்கவுள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள  இந்திய கடற்படைத் தளபதி, ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி,  இராணுவ மற்றும் விமானப்படைத் தளபதிகளையும்  சந்தித்து கலந்துரையாடல்களை  மேற்கொள்ளவுள்ளார்.