திருமலை கடற்கரை பிரதேசத்தின் சுத்திகரிப்பில் இணைந்துகொண்ட இந்திய கடற்படை தளபதி

டிசம்பர் 23, 2019

இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய கடற்படை தளபதி அட்மிரல் கரம்பிர் சிங், இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவுடன் இணைந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர், 22) திருகோணமலையிலுள்ள  சாண்டி பே கடற்கரை பிரதேசத்தில் சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்திய கடற்படை தளபதி அட்மிரல் கரம்பிர் சிங் கிழக்கு பிராந்திய கடற்படை கட்டளை தலைமயகத்திற்கான தனது விஜயத்தின் ஓர் அங்கமாக கடற்படை வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டினார்.