முத்துராஜாவெல தீயணைப்பு பணிகளுக்காக விமானப்படையின் உலங்கு வானூர்தி விரைவு

ஜனவரி 03, 2019

அண்மையில் நீர்கொழும்பு நகரிற்கு அண்மித்த முத்துராஜவெல ஒதுக்கு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்திணை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் வகையில் தீயணைப்பு பணிகளுக்கு உதவுவதற்காக இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான Mi - 17 உலங்கு வானூர்தி அப்பகுதிக்கு விரைந்தது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் விமானப்படையின் 6 படைப்பிரிவின் தீயணைப்பு பிரிவிற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கு அமைய Mi - 17 உலங்கு வானூர்தி குறித்த பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக விமானப்படைத் தகவல்கள் தெரிவிக்கிறன.

Mi - 17 உலங்கு வானூர்தி 2400 லிட்டர் பம்பி பக்கெட் கொள்திறன் அளவைக்கொண்டதுடன் இவ்வானூர்த்தி தளத்திற்குத் திரும்புவதற்கு முன் 8 பம்பி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.