பண்டிகை கால கொண்டாட்டங்களில் படையினரும் இணைவு - சிறார்களுக்கும் உதவிக்கரம்

டிசம்பர் 27, 2019

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு அண்மையில் (டிசம்பர்,24) இராணுவம் ஏற்பாடு செய்த நிகழ்வின்போது யாழ் பிராந்தியத்திலுள்ள வறிய மாணவர்களுக்கு சுமார் நூறு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது. தனியார் அமைப்பு ஒன்றின் நிதியுதவியுடன் குறித்த துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் யாழ் பாதுகாப்பு படை தலைமையகத்தினால் வறிய குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகளும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.
 
இந்நிகழ்வில் யாழ் மறைமாவட்ட ஆயர் வண. கலாநிதி ஜஸ்டின் பி ஞானப்பிரகாசம், யாழ் பாதுகாப்பு படைத்தளபதி, இராணுவ அதிகாரிகள் மற்றும் பிரதேச வாசிகள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.  

இதேவேளை, வன்னியில் உள்ள படையினரால் மதவாச்சி புனித சூசையப்பர் தேவாலயத்தில் கிறிஸ்மஸ் கரோல் கீதம் இசைக்கும் நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டது. இந்நிகழ்வில் புனித சூசையப்பர் தேவாலயத்தின் ஞாயிறு பாடசாலை மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் கலந்து கொண்டனர். அத்துடன் கிறிஸ்மஸ் கரோல் நிகழ்வில் பங்கு பற்றிய சிறுவர்களுக்கு பரிசுப்பொதிகளும் இதன்போது வழங்கப்பட்டது.

மேலும், இந்நிகழ்வை முன்னிட்டு கத்தோலிக்க பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகளின் ஒரு குழுவினருக்கு கண் பரிசோதனையின் பின்னர்  மூக்குக் கண்ணாடிகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.