மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலை, பாதுகாப்பு அமைச்சிற்கு ஜனாதிபதி திடீர் கண்காணிப்பு விஜயம்

டிசம்பர் 27, 2019

சேவையை பெற்றுக்கொள்வதற்காக அரச நிறுவனங்களுக்கு வருகைதருகின்ற எந்தவொருவரையும் அசௌகரியத்திற்கு உள்ளாக்காது உடனடியாக சரியான மற்றும் வினைத்திறனான சேவையை பெற்றுக்கொடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவது அனைத்து அரச ஊழியர்களினதும் பொறுப்பாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

அதேநேரம் அச்சேவைகளை வழங்கும்போது எந்தவிதமான முறைக்கேடுகளும் இடம்பெறுவதற்கு இடமளிக்கக்கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று (டிசம்பர், 26) பிற்பகல் மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்திற்குச் சொந்தமான வேரஹெர அலுவலகத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டபோதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.