யாழ் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

ஜனவரி 03, 2019

புத்தாண்டு பண்டிகை காலத்தினை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது தகுதிவாய்ந்த யாழ் மாணவர்கள் பத்து பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.

புத்தாண்டினை முன்னிட்டு இலங்கை இராணுவத்தின் படைவீரர்களின் நல்லிணக்க முன்னெடுப்புக்களின் ஒரு பகுதியாக இப்புதிய துவிச்சக்கர வண்டிகள் பரிசளிக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்புதிய துவிச்சக்கர வண்டிகள் யாழ் பாதுகாப்பு படைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டிதரச்சி அவர்களினால் நிகழ்வு ஒன்றின்போது வழங்கி வைக்கப்பட்டது. இவ்வன்பளிப்பு யாழ் தீபகற்பத்தில் மிகுந்த தூர இடங்களில் இருந்து பாடசாலைக்கு கல்வி நடவடிக்களுக்காக வரும் மாணவர்ளின் போக்குவரத்தினை இலகு படுத்தும் நோக்கில் வழங்கப்பட்டது.

இதேவேளை, பாதுகாப்புப் படைகளால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கார்னிவல் மற்றும் மியூசிக் எக்ஸ்ட்ராவாகன்ஸா' - களியாட்ட நிகழ்வு 28 ஆம் திகதி (டிசம்பர்) தொடங்கி மூன்று நாட்கள் இடம்பெற்றது. யாழ் கோட்டைக்கு அருகாமையில் இடம்பெற்ற இந்நிகழ்வு பெருமளவான பொதுமக்களை ஈர்த்தமை குறிப்பிடத்தக்கது.