இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில் நல்லுறவை மேம்படுத்த ஈரான் தூதுவர் வலியுறுத்தல்
ஜனவரி 02, 2020இலங்கை மற்றும் ஈரானுக்கு இடையிலான இரு தரப்பு ஒத்துழைப்பையும் நட்புறவையும் மேம்படுத்த இலங்கைக்கான ஈரானிய தூதுவர் முஹம்மட் சாயிரி அமிராணி வேண்டுகோள் விடுத்தார்.
ஈரான் தூதுவருக்கும் பாதுகாப்புச் செயலாளர் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவுக்கும் இடையிலான நல்லெண்ண சந்திப்பு பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஜனவரி 02) இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டில் அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் பொருட்டு முப்படை மற்றும் பொலிசாரை அரசாங்கம் கையாளும் விதத்தை ஈரான் தூதுவர் இதன்போது பாராட்டினார். ஈரானின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் விளக்கமளித்த அவர், தனது நாட்டில் இலங்கையின் முப்படை மற்றும் பொலீசாருக்குள்ள பயிற்சி வாய்ப்புக்கள் தொடர்பிலும் விளக்கமளித்தார்.
ஈரான் தூதுவரின் மேற்படி நல்லெண்ண வெளிப்பாட்டிற்கு நன்றி தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் குணரத்ன, ஈரானுடனான இருதரப்பு உறவினை மேலும் முன்னேற்றகரமாக முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
இதேவேளை, இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் ஈரான் தூதுவர் ஆகியோர் நினைவுச் சின்னங்களை பரிமாறிக்கொண்ட கொண்டமை குறிப்பிடத்தக்கது.