ஐ.நாவிற்கான இலங்கையின் வதிவிட பிரதிநிதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

ஜனவரி 02, 2020

ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிட பிரதிநிதி ஷேணுகா செனவிரத்ன பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை சந்தித்தார்.

பாதுகாப்பு செயலாளர் மற்றும்  ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிட பிரதிநிதிக்குமான இந்த சந்திப்பு பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஜனவரி,02) இடம்பெற்றது. இதன்போது பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

ஷேணுகா செனவிரத்ன இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளராகவும் தாய்லன்ந்து மற்றும் லாவோசுக்கான முன்னாள் இலங்கை தூதுவராகவும் 2015 ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை சேவையாற்றியமை குறிப்பிடத்தக்கது.