இலங்கை விமானப் படை விமானம் ஹப்புத்தளையில் விபத்து

ஜனவரி 03, 2020

இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான வை-12 ரக விமானம் இன்று (ஜனவரி-03) காலை ஹப்புத்தளை பிரதேசத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

வீரவில விமானப்படைத் தளத்திலிருந்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த நிலையிலேயே இன்று காலை 09.15 மணியளவில் தம்பி பிள்ளை மாவத்தையிலுள்ள மலை பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் மேற்படி விமானத்தில் பயணித்த நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இவர்களில் விமானிகள் இருவரும்  விமானப் படை கண்காணிப்பு வீரர்கள் இருவருமே உயிரிழந்துளளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்படி விமானம் விபத்துக்குள்ளான பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காயமுற்ற நிலையில் ஹம்புத்தளை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் ஆராயும் பொருட்டு விமானப் படையின் விஷேட விசாரணைக் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.