நோர்வே தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

ஜனவரி 08, 2020

நோர்வே தூதுவர்  ட்ரைன் ஜெரான்லி எஸ்கெடல் (Trine Jøranli Eskedal ) பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று (ஜனவரி, 08) சந்தித்தார்.
 
பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில் நோர்வே தூதுவர்  மற்றும் பிரதி தூதுவர்  ஆகியோரை  வரவேற்ற பாதுகாப்புச் செயலாளர், நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் நாட்டின் அபிவிருத்தி செயல்முறை குறித்து அவர்களுக்கு விளக்கமளித்தார்.

தொடர்ந்து இடம்பெற்ற இக் கலந்துரையாடலின் போது தூதுவர் ஜெரான்லி, அனர்த்த முகாமைத்துவம்  மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அபிவிருத்தி  போன்ற பகுதிகளில் இலங்கைக்கு அபிவிருத்தி உதவிகளை வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.  

இதன்போது பாதுகாப்பு செயலாளர், போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக நோர்வே அளிக்கும்  உதவி பாராட்டுதலுக்குரியவை  என தெரிவித்தார்.  

இந்த சந்திப்பில்  நோர்வே தூதரகத்தின்ஆலோசகரும் பிரதி  தலைவருமான  மோனிகா ஸ்வென்ஸ்கெரூட் (Monika Svenskerud) உம் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.