நாட்டின் துரித அபிவிருத்தியை கருத்திற்கொண்டு புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுப்பது அவசியமாகும் என ஜனாதிபதி தெரிவிப்பு

ஜனவரி 11, 2020


•    இடைநிலை மற்றும் உயர் கல்விக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தல்
•    இலவச கல்வியைப் பாதுகாக்கும் அதே வேளை உயர்கல்விக்கான வாய்ப்புகள்
•    அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் மார்க்கமாக உயர் கல்வித் துறையில் மாற்றல்
 
நாட்டின் துரித அபிவிருத்தியை கருத்திற்கொண்டு புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுப்பது அவசியமாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.  

உள்ளூர் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய உயர் கல்வி நிறுவனங்களைப்போல் அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களும் உயர் தரம்வாய்ந்த கல்வியை வழங்குவதை உறுதிசெய்ய முடியுமாக இருந்தால்  இலங்கையில் கல்விக்காக வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்க முடியும் என்பதுடன், உயர் கல்வித் துறையை அந்நியச் செலாவணி ஈட்டித் தரும் மார்க்கமாகவும் மாற்ற முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

http://www.pmdnews.lk