தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய எஸ் ரி எப்பினால் விஷேட நடவடிக்கை பிரிவு
ஜனவரி 12, 2020தேசிய பாதுகாப்பு மற்றும் பொது மக்கள் பாதுகாபை உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் தலைமையகத்தில் 24 மணி நேரமும் செயற்படும் வகையில் விஷேட நடவடிக்கை பிரிவு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் பொருட்டும் நாட்டில் இடம்பெறும் சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்னவின் வழிகாட்டலின் கீழ் மேற்படி விஷேட நடவடிக்கை பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
திட்டமிட்ட குற்றச் செயலில் ஈடுப்படும் குழு, கப்பம் கோருபவர்கள், போதைப் பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் இது போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுப்படுபவர்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள் தகவல்களை வழங்கவும் முறைப்பாடுகளை பதிவு செய்யவும் முடியும் என்று பொலிஸ் விஷேட அதிரடிப் படை பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தகவல்கள் வழங்குபவர்கள் மற்றும் முறைப்பாடு செய்பவர்களின் இரகசிய தன்மை பேணப்படும் என்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொது மக்கள்
0112 580 518,
0112 058 552,
0112 500 471,
0112 506 588 மற்றும் 0112 589 741
என்ற தொலைப்பேசி இலக்கங்கள் அல்லது
0112 588 489,
0112 081 044
என்ற பெக்ஸ் இலக்கங்கள் ஊடாக தங்களது முறைப்பாடுகளை பதிவு செய்துக் கொள்ள முடியும் என்றும் கோரப்பட்டுள்ளது.