தேசிய பாதுகாப்பானது அலட்சியம் மற்றும் அறியாமை காரணமாகவே புறக்கணிக்கப்பட்டது – பாதுகாப்பு செயலாளர்
ஜனவரி 13, 2020நாட்டின் தேசிய பாதுகாப்பானது கடந்தகாலங்களில் நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்திற்கும் முன்னுரிமை வழங்கப்பட்டதன் காரணமாகவே புறக்கணிக்கப்பட்ததாகவும் மாறாக தற்போதைய அரசாங்கம் பாதுகப்பானாதும் அமைதியானதுமான தேசத்தை உருவாக்கியுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன இன்று (13) தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை நினைவு கூர்ந்த அவர், அலட்சியம் மற்றும் அறியாமை காரணமாகவே அப்போதைய பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளினால் தேசிய பாதுகாப்பானது முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பை நிருவகிப்பது தொடர்பாக அவர்கள் மீதுள்ள பொறுப்புக்கள் தொடர்பாக பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் அறிந்திருந்தால் அவர்கள் அதற்கு எதிரான சாத்தியமான செயற்பாடுகளை மேட்கொண்டிருப்பார்கள் என மேஜர் ஜெனரல் குணரத்ன அவர்கள் சுட்டிக்காட்டினார்.
பாதுகாப்பு செயலாளராக தனது கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் முதற் தடவையாக இலங்கை விமானப்படை தலைமையகத்திற்கு வியஜமொன்ரை மேற்கொண்டு விமானப்படை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் இங்கு உரையாற்றுகையில், நாட்டின் தேசிய பாதுகாப்பினை சீர்குலைக்கும் எந்த ஒரு நடவடிக்கைகளையும் முரியடிக்காக் கூடிய வகையில் இராணுவத்தினர் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலை புலிகள் தமது ஆயுத பலத்தால் அடைய முடியாதவற்றை சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் அரசிற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு புலம்பெயர் தமிழர்கள் அடைய முயற்சிப்பதாகவும், அவ்வாறான அனைத்தும் முயற்சிகளும் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கான நலன்புரிகளை பெற்றுக்கொள்வதற்கான சகல ஒத்துழைப்பினையும் வழங்குவதாக உறுதியளித்த செயலாளர், நாட்டை பாதுகாப்பதற்கு தேசிய பாதுகாப்பினை நிருவகிக்க ஒத்துழைப்பு வழங்குமாறு அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
உலகின் மிக சிறந்த சேவையாக கானப்படும் இராணுவ சேவைக்கு தங்களின் ஒத்துழைப்பை வழங்குமாறு குறிப்பிட்ட அவர், சமாதானத்திற்கு குந்தகம் விளைவிக்கும் அச்சுறுத்தல்களிலிருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் பாரிய பொறுப்பு தன்னிடம் உள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.
யுத்த காலங்களில் ஊடக பிரச்சார நடவடிக்கைகள் குறைந்தளவில் காணப்பட்டதால் இலங்கை விமானப்படைகளின் சேவைக்கு கிடைக்கைகூடிய தகுந்த கௌரவம் கிடைக்கவில்லை என்பதாகவும் எனினும், யுத்தத்தை வெற்றிகொள்வதற்கு விமானப்படை வீரர்களால் வழங்கப்பட்ட சேவைகள் பாராட்டப்பட வேண்டியது எனவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.
"நாட்டின் எதிர்காலத்திற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த இலங்கை விமானப்படை வீரர்கள் அனைவருக்கும் நாடு கடமைப்பட்டிருக்கிறது" எனவும் மேஜர் ஜெனரல் குணரத்ன இங்கு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில், இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள் டயஸ், விமான நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் எயார் வைஸ் மாஷல் ரவி ஜயசிங்க, சிரேஷ்ட அதிகாரிகள், விமானப்படை அதிகாரிகள் மற்றும் விமானப்படை வீரர்கள் பலரும் கலந்து கொண்டனர்.