தேசிய புலனாய்வு புதிய சட்டமூல வரைவிற்கு அரசு அங்கீகாரம்

ஜனவரி 16, 2020

தேசிய பாதுகாப்பினை பாதுகாக்கும் வகையில் நாட்டின் அனைத்து புலனாய்வு சேவைகளுக்கும் வலுப்படுத்தி ஒழுங்குபடுத்தும் வகையில் வரையப்பட்ட புதிய தேசிய புலனாய்வு சட்டமூல வரைவிற்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவினால் அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்ட மேற்படி புதிய தேசிய புலனாய்வு சட்டமூல வரைவிற்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நாட்டின் புலனாய்வுத் துறையினரை வளப்படுத்தி எதிர்காலத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்கும் வகையிலேயே புதிய தேசிய புலனாய்வு சட்டமூலததை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்ததாக  அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்து தெரிவித்தார்.

தேசிய புலனாய்வு சட்டமூல வரைவினை தயார்செய்வதற்காக சட்ட வரைஞரின் ஆலோசனைகள் பெறப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அமைச்சரவை அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரை பத்திரமானது குறிப்பிட சில புலனாய்வு நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கு தேவையான சட்ட விதிகளில் குறைபாடுகள் காணப்படுவதால்  புலனாய்வுத்துறையின் செயற்பாடுகளை முன்னெடுக்க தடையாக காணப்படுவதை நிவர்த்தி செய்யும் வகையில்   அமைந்துள்ளது.

இப்புதிய சட்டமூலமானது,  நாட்டின் பாதுகாப்பு நிலைமையை கண்காணிப்பதன் மூலமும் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குவதன் மூலமும் தேசிய பாதுகாப்பை நிர்வகிக்க புலனாய்வுத் துறை அமைப்புகளுக்கு அதிகாரங்களை வழங்கும் என்பதாக அமைச்சர் குணவர்தன தெரிவித்தார்.