--> -->

இலங்கையுடனான பாதுகாப்பு உறவை மேம்படுத்த ரஷ்யா உறுதி

ஜனவரி 16, 2020

    · பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் பாதுகாப்பு ஒத்துழைப்பை புதுப்பிப்பு

நாட்டின் பாதுகாப்பு பிரச்சினைகளை கையாள்வதற்கு, இராணுவம் பயன்படுத்தப்பட்டுள்ள விதத்தை  பாராட்டியுள்ள ரஷ்ய அரசு, இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கவும்  உடன்பட்டுள்ளது.

மேலும்,  இலங்கை இராணுவத்தின் இராணுவ ஆளுமையை  மேம்படுதுவதற்கு அவசியமான  ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை வழங்குவற்கும்  உறுதியளித்துள்ளது.

"இலங்கையில் பாதுகாப்பு பிரச்சினைகளை கையாள்வதற்காக இராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ள விதம்  குறித்து தான்  திருப்தியடைவதாகவும்,  இலங்கை இராணுவம் அதன் பாதுகாப்பு திறனை மேம்படுத்துவதற்கு தேவையான ஆயுதங்களையும் உபகரணங்களையும் வழங்க தனது நாடு  தயாராக உள்ளதாகவும்"   ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் இணைந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது  போது கருத்து வெளியிட்ட ரஷ்ய வெளிவிவகார அமைச்சர், இரு நாடுகளுக்குமிடையில் பகிர்த்து கொள்ளப்படும் வெளிவிவகார நடவடிக்கைகள் தொடர்பாக தான் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார். இதன்போது  கருத்து வெளியிட்ட வெளிவிகார அமைச்சர் தினேஷ் குணவர்தன,  சட்ட அமலாக்கம் மற்றும் பாதுகாப்பு  துறைகளில்  இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் நீண்டகால உறவுகள் குறித்து   நினைவு கூர்ந்தார்.

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தலைமையிலான  42 அங்கத்தவதவர்களைக் கொண்ட தூதுக்குழு அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்துததுடன் அவர்கள்  பாதுகாப்பு, அரசியல், வர்த்தகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தனர்.

அண்மைய காலங்களில் கைச்சாத்திடப்பட்ட இராணுவ ஒத்துழைப்பு உடன்படிக்கையை  ஆதரிக்கும் அதே வேளை, பாதுகாப்பு ஒருங்கிணைப்பு மூலம் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த இரு தரப்பினரும்  உடன்பட்டனர்.

இந்து சமுத்திர  பிராந்தியம் தொடர்பாக அதிகரித்து வரும்   கவன ஈர்ப்பினை எடுத்துக்காட்டி, இரு நாடுகளும்,  எதிர்காலத்தில் சர்வதேச வர்த்தகத்தை மேம்படுத்த இப்பிராந்தியத்தின்  பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும் பேணுவதன் முக்கியத்துவம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.  

இந்த கலந்துரையாடலின் போது இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பின் கீழ் உள்ள  திட்டங்களை இரு அமைச்சர்களும் முன் மொழிந்தனர். இதன்போது அமைச்சர் குணவர்தன, தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும்  பயங்கரவாதம், வன்முறை தீவிரவாதம், சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மற்றும் நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக கையாள்வதற்கும்,  இது தொடர்பில் சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்வதில் தங்களது ஒத்துழைப்பைத் தொடர்வதற்கும் இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும்,  ரஷ்ய வெளிநாட்டமைச்சர்,  ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவை தங்களது நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க, பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.