புதிய உப வேந்தராக மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் கடமைகளை பொறுப்பேற்பு

ஜனவரி 17, 2020

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புதிய உப வேந்தராக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் 2020 ஜனவரி 16ஆம் திகதி தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த புதிய உப வேந்தருக்கு விஷேட வரவேற்பு மற்றும் மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது. மேற்படி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்தின் முதல்வர் பிரிகேடியர் அதீப திலக்கரட்ன, பிரதி உப வேந்தர் (பாதுகாப்பு மற்றும் நிர்வாகம்) பிரிகேடியர் நந்த ஹதுருசிங்ஹ, பிரதி உப வேந்தர் (கல்வி) சிரேஷ்ட பேராசிரியர் ஜயந்த ஆரியரட்ன, பீடாதிபதிகள், முப்படைகளின் உயர் அதிகாரிகள், கல்விசார், கல்விசாரா பணியாளர்கள், கெடெட் அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் கலந்து மேற்படி கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் அவர்கள் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக நியமிக்கப்பட்ட இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். இவர் ஏற்கனவே உப வேந்தராக செயற்பட்ட 2008 டிசம்பர் மாதம் 28ஆம் திகதி முதல் 2016 பெப்ரவரி 18ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மேற்படி பல்கலைக்கழத்தை முன்னேற்றவும் இந்த பிராந்தியத்தின் அங்கீகாரமுள்ள ஒரு பல்கலைக்கழகமாகவும் மாற்றவும் அயராது பாடுபட்டமை குறிப்பிடத்தக்கது.