பிலிப்பைன்ஸ் கடற்படையின் இரு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்
ஜனவரி 27, 2020பிலிப்பைன்ஸ் கடற்படைக்கு சொந்தமான “ரெமன் அல்கராஸ்' மற்றும் 'டாவோ டெல்சூர்' என்ற கப்பல்கள் மூன்று நாள் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (26) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இரு கப்பல்கலையும் இலங்கை கடற்படையினர் கடற்படை பாரம்பரியத்துக்கு அமைய வரவேற்றனர்
மேற்படி இரு கப்பல்களுக்குமான தளபதி கேர்ணல் நோயல் டி பெலாரன், வருகைதந்துள்ள பிலிப்பைன்ஸ் கப்பல்களின் கட்டளை அதிகாரிகளான கெப்டன் பிரான்சிஸ்கோ லூயிஸ் மற்றும் கமாண்டர் ஹோமர் டி கோன்சலஸ் மற்றும் அதிகாரிகள் மேற்கு கடற்பிராந்திய தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்கைவை மேற்கு பிராந்திய கடற்படை கட்டளை தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்
இருதரப்பு பரஸ்பர விடயங்கள் தொடர்பாக சுமூக கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன், இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
இலங்கையில் மூன்று நாட்கள் தரித்திருக்கும் அதேசமயம் மேற்படி இரு கப்பல்களிலுமுள்ள கடற்படை வீரர்கள் இலங்கை கடற்படையினருடன் இணைந்து விளையாட்டு செயற்பாடுகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளளில் பங்கெடுக்கவுள்ளதுடன், பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்யவுள்ளனர். இரு கப்பல்களும் ஜனவரி 29ஆம் திகதி நாட்டைவிட்டு புறப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.