ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானம் உஹான் நகரில் தரையிறங்கி 32 இலங்கை மாணவர்களையும் அழைத்துவர ஜனாதிபதி ராஜபக்ஷ அனுமதி
ஜனவரி 27, 2020• மேலும் 860 இலங்கை மாணவர்களே சீனாவில் உள்ளனர்
• கொரோனா வைரஸால் சீனாவிலுள்ள இலங்கையர்கள் எவரும் இதுவரையில் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் இல்லை
நேற்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானம் உஹான் நகர விமான நிலையத்தில் தரையிறங்க பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் விண்ணப்பம் ஒன்றை இன்று வழங்கியுள்ளது. இதன்பிரகாரம் அங்குள்ள 32 இலங்கை மாணவர்களுடன் அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விமானம் தரையிறங்குவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான செயற்பாடுகளை விரைவுபடுத்துவதற்காக சீன வெளியுறவு அமைச்சு மற்றும் உஹான் மாகாணத்தின் வெளியுறவு அலுவலகம் ஆகியவற்றுடன் இலங்கை தூதரகம் தொடர்ந்தும் அவதானத்துடன் இருபதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது சீனாவில் கல்வி பயிலும் அனைத்து இலங்கை மாணவர்களையும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான வழிமுறைகளை செயல்படுத்துவதற்காக தூதரகம் மற்றும் துணைத் தூதரகங்களும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் உடன் இணைந்து செயல்படுவதாக இலங்கை வெளிநாட்டு அமைச்சு தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தற்போது சுமார் 860 மாணவர்கள் சீன நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஊடக வெளியீடு
சீனா, வூஹானில் வசிக்கும் இலங்கையர்களின்
தற்போதைய நிலை – 26 ஜனவரி 2020
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நேற்றைய தினம் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின் பிரகாரம்; வூஹான் நகரில் வசிக்கும் 32 இலங்கை மாணவர்களையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் வூஹான் நகர விமான நிலையத்திலிருந்து, ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானம் மூலம் வெளியேற்றுவதற்கான ஒரு விண்ணப்பத்தை பெய்ஜிங்கிலுள்ள இலங்கைத் தூதரகம் இன்று சமர்ப்பித்தது. இலங்கையர்கள் தற்போது வசிக்கும் இடங்களிலிருந்து வெளியேறுவதற்கான அனுமதி கிடைத்ததும், விமானத்தை அங்கு தரையிறக்குவதற்கான இசைவாணையைப் பெற்று அவர்களை உடனடியாக விமான மார்க்கமாக அங்கிருந்து கொண்டுவரும் செயற்பாடுகளை விரைவுபடுத்துவதற்காக, சீன வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் வூஹான் மாகாண வெளிநாட்டு அலுவல்கள் அலுவலகம் ஆகியவற்றுடன் இணைந்து இலங்கைத் தூதரகம் தொடர் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
சீனாவில் தற்போது கல்விபயின்று வரும் பிற இலங்கை மாணவர்களையும் இலங்கைக்குக் கொண்டுவருவதற்காக அமைச்சு, சீனாவிலுள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் துணைத்தூதரகங்கள் ஆகியன ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸுடன் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தற்போது, சீனாவின் எல்லா நகரங்களிலும் பரவலாக கிட்டத்தட்ட 860 இலங்கை மாணவர்கள் உள்ளனர்.
இதேவேளை, பெய்ஜிங்கிலுள்ள இலங்கைத் தூதரகமும் ஷாங்காய் மற்றும் குவாங்ஸூவிலுள்ள துணைத்தூதரகங்களும், இந்த நோய்க்கான வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வழங்குவதற்காக, சீனாவின் வூஹான் மற்றும் பிற பகுதிகளிலுள்ள இலங்கை மாணவர்களுடன் தொடர்புகளை மேற்கொண்டுள்ளது. கொரோனா வைரஸால் எந்தவொரு இலங்கையரும் பாதிக்கப்பட்டதாக எந்தவொரு தகவல்களும் தூதரகத்திற்கோ துணைத்தூதரங்களுக்கோ கிடைக்கவில்லை.
சீனாவில் வசிக்கும் இலங்கை மாணவர்கள் மற்றும் தொழில்விற்பன்னர்கள் இலங்கைக்கு வரவிரும்பினால் அவர்களுக்கு உதவியாக, பெய்ஜிங்க், ஷாங்ஹாய் மற்றும் குவாங்ஸூவிலிருந்து இயங்கும் வழமையான ‘ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ்’ சேவையில் 50 வீதக்கழிவினை வழங்குவதற்காக, வெளிநாட்டு உறவுகள் அமைச்சு, பெய்ஜிங்கிலுள்ள இலங்கைத் தூதரகத்துடனும் ஷாங்ஹாய் மற்றும் ஹுவாங்ஸூவிலுள்ள துணைத் தூதரகங்களுடன் இணைந்து உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சீனாவிலிருந்து இலங்கைக்குப் பயணம் செய்ய விரும்பும் சகல இலங்கையர்களும் 0094777771979 என்ற இலக்கத்தில் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் அழைப்பு நிலையத்திற்கு அழைப்புக்களை மேற்கொள்வதன் மூலம் குறிப்பிட்ட விமானச்சீட்டுக்கான கட்டணத்திலிருந்து 50 வீத விலைக்கழிவினைப் பெறலாம்.
சீனாவில் வசிக்கும் இலங்கையர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கான உதவிகளை வழங்குவதற்கென, அங்குள்ள இலங்கைத்தூதரகமும் துணைத்தூதரகங்களும் 24 மணித்தியாலங்களும் தொழிற்பாட்டிலுள்ளன. 0086-10-65321861/2 என்ற சிறப்புத் தொலைபேசி இலக்கத்தில் அழைத்து தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம். இது தொடர்பான எந்த விதமான விசாரணைகளுக்கும் பின்வரும் தூதரக அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம். இந்த அலுவலர்களை 24 மணி நேர அடிப்படையில் பின்வரும் இலக்கங்களில் தொடர்புகொள்ளலாம்:
திரு அலெக்ஸி குணசேகர, ஆலோசகர் (வர்த்தகம்) +8613070138025
பிரிகேடியர் கல்ப சஞ்சீவ, ஆலோசகர் (பாதுகாப்பு) +8613051733302
திருமதி இனோகா வீரசிங்க, இரண்டாம் செயலாளர் +8615116905523
திருமதி திலினி குணரட்ன, இரண்டாம் செயலாளர் +8613121722296
ஷாங்ஹாய், அன்ஹூயி, ஷேஜியாங், ஜியாங்ஸூ மற்றும் ஹூனான் ஆகிய பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்கள் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கு ஷாங்ஹாயிலுள்ள துணைத்தூதரக அதிகாரி, திருமதி மனோரி மல்லிகாராச்சியை 0086 13472771702 என்ற இலக்கத்திலோ அல்லது தூதரக இணைப்பதிகாரி திருமதி கீதா பெரேராவை 008615900946639 என்ற இலக்கத்திலோ தொடர்பு கொள்ளலாம்.
குவாங்டொங், ஃபுஜியான், ஹெய்னன், குவாங்ஸி, ஜியாங்ஸி ஆகிய இடங்களில் வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு குவாங்ஸூவின் உதவித் தூதரக அதிகாரி திருமதி பிரியங்கிகா தர்மசேன அவர்களை 0086 18814134670 என்ற
நன்றி: வெளிநாட்டு உறவுகள் அமைச்சு