வடமாகான மாணவர்களின் கல்விக்காக இராணுவத்தினர் உதவி

ஜனவரி 07, 2019

இலங்கை இராணுவத்தினர் அண்மையில் வடக்கின் கஷ்டப்பிரதேசத்திலுள்ள மாணவர்கள் ஒரு குழுவினருக்கு ஒரு தொகை பாடசாலை உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர். கடந்த வாரம் (டிசம்பர், 29) கிளிநொச்சி சமூக நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போது, சிலாவத்துறை மற்றும் கொண்டாச்சி ஆகிய கிராமங்களில் வசிக்கும் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள குடும்பங்களை சேர்ந்த சுமார் 39 மாணவர்களுக்கு இவ்வாறு கல்வி உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன. (Baurs Company PLC) பாஉர்ஸ் கம்பெனி பீ எல் சீ கொழும்பு நிறுவனம் இந்நன்கொடைக்கான அனுசரணையினை வழங்கியுள்ளது.

இதேவேளை, இராணுவத்தினர் மன்னார் மாவட்டத்திலுள்ள மாணவர்களுக்கும் இவ்வாறான பாடசாலை உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை மேற்கொண்டுள்ளனர். இதன்பிரகாரம் கடந்த வாரம் இங்கு இடம்பெற்ற நிகழ்வின்போது சுமார் 170 மாணவர்கள் மத்தியில் ஒவ்வொன்றும் 2500.00 ரூபாய் பெறுமதியான பாடசாலை உபகரணங்கள், பாடசாலை பைகள் மற்றும் புத்தகங்கள் அடங்கிய அன்பளிப்பு பொதிகள் விநியோகிக்கப்பட்டன. இராணுவத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க கொழும்பு ஹட்டன் நெஷனல் வாங்கி இதற்கான அனுசரணையினை வழங்கியுள்ளது. இன