சேவா வனிதா பிரிவின் புதிய தலைவி திருமதி குணரத்ன கடமைகளை பொறுப்பேற்பு
ஜனவரி 30, 2020பாதுகாப்பு அமைச்சு சேவா வனிதா பிரிவின் புதிய தலைவியாக திருமதி. சித்ராணி குணரத்ன தனது கடமைகளை இன்று (ஜனவரி, 30)பொறுப்பேற்றுக்கொண்டார்.
பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற வைபத்தின் போது சுபவேளையில் மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் அவர் தனத கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் முப்படைகள்,பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைகளின் சேவா வனிதா பிரிவுகளின் தலைவிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் பாராளுமன்ற விவகாரங்களுக்கான சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஆகியோரர் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவானது படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் சேமலாப நலன்களை முன்னெடுப்பதற்காக உருவாக்கபப்ட்ட ஒரு அமைப்பாகும். இது பிரதானமாக வீடமைப்புக்கான நிதி உதவி வழங்குதல், படைவீரர்களின் குழந்தைகளுக்காக கல்வி உதவித்தொகைகளை வழங்குதல் மற்றும் அவசரகால மற்றும் பிற நலன்புரி நடவடிக்கைகளில் படைவீரர்களின் குடும்பங்களுக்கு நலன்புரி மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருவதுடன் முப்படை மற்றும் சிவில் பாதுகாப்பு படைகளின் சேவா வனிதா பிரிவுகளுடன் இணைந்து நலன்புரி செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் ஒரு பிரிவு என்பது குறிப்பிடத்தக்கது.