244 இராணுவ அதிகாரிகள் ஜனாதிபதியினால் தரமுயர்த்தப்பட்டுள்ளனர்

பெப்ரவரி 04, 2020

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 244 அதிகாரிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தரமுர்த்தப்பட்டுள்ளனர். 17 பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல்களாக தரமுயர்த்தப்பட்டவர்களில் அடங்குவதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.   

45 லெப்டினன்ட் கேர்ணல்கள் கேர்ணல்களாகவும், 49 மேஜர்கள் லெப்டினன்ட் கேர்ணல்களாகவும், 42 கெப்டன்கள் மேஜர்களாகவும், 80 லெப்டினன்ட்கள் கெப்டன்களாகவும் 11 இரண்டாம் லெப்டினன்ட்கள் லெப்டினன்ட்களாகவுமே தரமுயர்த்தப்பட்டுள்ளவர்களின் பட்டியலில் உள்ளனர்.  

இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டே அதிகூடிய அதிகாரிகளுக்கு மேற்படி தரமுயர்வு வழங்கப்பட்டுள்ளது.