சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்க விஷேட நிவாரண காலம் அறிவிப்பு
பெப்ரவரி 05, 2020அனுமதிப்பத்திரமில்லாமல் சட்டவிரோதமான முறையில் பாயன்படுத்தும் அல்லது தன்வசம் வைத்திருக்கும் ஆயுதங்களை அரசிடம் ஒப்படைப்பதற்கான ஒரு வார கால (பெப்ரவரி, 5 முதல் 12 வரை) நிவாரண காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத ஆயுதங்களை சமூகத்திலிருந்து கலையும் ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு அமைய இந்த ஒருவார கால பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது
இப்பொதுமன்னிப்பு காலப்பகுதிக்குள் அனுமதிப்பத்திரமில்லாத சட்டவிரோத ஆயுதங்களை தம் வசம் வைத்துள்ள நபர்கள் தத்தமது பிரதேசங்களிலுள்ள பொலிஸ் நிலைகளில் அவற்றினை ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் ஆயுதங்களை அரசாங்கம் வழங்கியுள்ள பொது மன்னிப்பு காலப்பகுதிக்குள் ஒப்படைக்காதவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அரசாங்கம் வழங்கியுள்ள நிவாரண காலப்பகுதிக்குள் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் ஆயுதங்களை ஒப்படைக்குமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் ஆயுதங்களை அரசாங்கம் வழங்கியுள்ள நிவாரண காலப்பகுதிக்குள் ஒப்படைக்காதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதேவேளை, அரசு வழங்கியுள்ள நிவாரண காலப்பகுதிக்குள் சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்காமல் தன்வசம் சட்டவிரோதமான முறையில் தொடர்ந்து வைத்திருப்பவர்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறியத்தருமாறு பாதுகாப்பு அமைச்சு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.