தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகமாக பேராசிரியர் அட்மிரல் ஜெயனாத் கொலம்பகே நியமனம்

பெப்ரவரி 10, 2020

இலங்கையின் தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின்பணிப்பாளர் நாயகமாக பேராசிரியர் அட்மிரல் ஜெயனாத் கொலம்பகே  நியமிக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவிடமிருந்து பாதுகாப்பு அமைச்சில் இன்று  அவர் தனது நியமனக் கடிதத்தை  பெற்றுக்கொண்டார்.  

சர்வதேச உறவுகள் தொடர்பில்   நிபுணதத்துவம் மிக்க  இவர், வெளிநாட்டு உறவுகளுக்கான  ஜனாதிபதியின் மேலதிக  செயலாளராகவும் அண்மையில்  நியமிக்கப்பட்டிருந்தார்.

36 ஆண்டுகள் கடற்படை சேவைக்காலத்தைக் கொண்ட பேராசிரியர் அட்மிரல்  கொலம்பகே, இலங்கை கடற்படையின்  18 வது தளபதியாக பதவிவகித்த அவர், "Asymmetric Warfare at Sea" எனும் புகழ்பெற்ற புத்தகத்தை  எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.