சிங்கள - ஆங்கில அகராதி பாதுகாப்பு செயலாளரிடம் கையளிப்பு

பெப்ரவரி 12, 2020

புத்ததாச ஹேவகேயினால் தொகுக்கப்பட்ட சிங்கள சொற்களுக்கான  ஆங்கில விளக்கம் கொண்ட அகராதியொன்று பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவிடம்  இன்று (பெப்ரவரி, 12) கையளிக்கப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது ஹேவகேயின் ஏனைய வெளியீடுகளான “த விக்டிம்ஸ்”, “த ஷேடோ ஒப் லைப்” மற்றும் “சுலங் ஹொரவ” ஆகிய புத்தகங்களும் பாதுகாப்பு செயலாளரிடம் வழங்கிவைக்கப்பட்டன.   

ஒரு இலட்சம் சிங்கள சொற்களுக்கு ஒரு இலட்சத்தி ஐம்பதாயிரம் ஆங்கில சொல் விளக்கத்தை கொண்ட குறித்த அகாராதி இரண்டாயிரத்து ஐநூறு பக்கங்களைக்கொண்டு காணப்படுகிறது. இதன் படைப்பாளரான புத்ததாச ஹேவகே ‘கலாகீர்த்தி’ மற்றும் ‘கலாபூஷனா’ விருதுகள் பெற்ற ஒரு பிரசித்திபெற்ற எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின்போது பாதுகாப்பு செயலாளரினால் எழுதப்பட்ட ‘கடோல் அத்து’, மற்றும் ‘உத்தர தேவி’ ஆகிய இரண்டு புத்தகங்களையும்  ஹேவகே இடம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.