ரணவிருசேவா அதிகார சபை அதன் சேவையை மேலும் விஸ்தரிப்பு

பெப்ரவரி 13, 2020
  • தாய்நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த மற்றும் அங்கவீனமுற்ற படை வீரர்களுக்கு வழங்கப்படும் சேவைகள் மாவட்ட ரீதியில் விஸ்தரிப்பு

தாய்நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த மற்றும் அங்கவீனமுற்ற படை வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேலும் விஸ்தரித்து ஒரே கூரையின் கீழ் பல்வேறு சேவைகளை வழங்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சினால் ரணவிரு சேவா அதிகார சபை மேலும் மேம்படுத்தப்படும்.

நாட்டில் சமாதானத்தையும் அமைதியாக வாழும்  சூழலையும்  ஏற்படுத்துவதற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ரணவிரு சேவா அதிகார சபை தலைமை அலுவலகத்திற்கு செயலாளராக பதவியேற்ற பின்னர் இன்று ( பெப்ரவரி, 13) முதற்தடவையாக  விஜயத்தை மேற்கொண்டு  அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தாய்நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த மற்றும் அங்கவீனமுற்ற படை வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேலும் விரிவுபடுத்தி சிறந்த சேவையினை வழங்கும் வகையில் ரணவிரு சேவா அதிகார சபையினை மேலும் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இதன் போது வலியுறுத்தினார்.

"பல்வேறு மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில்  நியமிக்கப்பட்டுள்ள இந்நிறுவனத்தின் அதிகாரிகள் பிராந்திய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அந்தந்த பகுதிகளுக்கு  மாற்றப்படுவார்கள்" எனவும் அவர் தெரிவித்தார்.

தாய்நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த மற்றும் அங்கவீனமுற்ற படை வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் சேவைகளை எந்தவித தங்கு தடையின்றி உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் நாட்டின் எதிர்காலத்திற்காக போராடிய இராணுவ வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவித்தார்.

மேலும் தற்போது நெறிப்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் செயல்முறை அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வழிவகுக்கும் எனவும் அவர் இங்கு குறிப்பிட்டார்.

2019, டிசம்பர் 10ஆம் திகதி வெளியிடப்பட்ட 2153/12 இலக்க விஷேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் ரணவிருசேவா அதிகார சபையானது பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


இந்நிகழ்வில், ரணவிருசேவா அதிகார சபையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) நந்தன சேனாதீர,  பிரதிப்பணிப்பாளர் சோனியா கோட்டே கொட உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.