‘சந்தஹிரு சேய’ நிர்மாணப்பணிகளின் முன்னேற்ற மீளாய்வு

பெப்ரவரி 14, 2020

பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு ) கமல் குணரத்னவின் ஆலோசனைகளுக்கு ஏற்ப ‘சந்தஹிரு சேய’ நிர்மாணப்பணிகள் விரைவு படுத்தப்பட உள்ளது.

பக்தர்கள் தமது வழிபாடுகளை மேற்கொள்ளும் வகையில் “சேத்திய” இனது நிர்மான வேலைத்திட்டங்களை முதலில் நிரைவு செய்வதற்கும் சிற்பங்கள் மற்றும்  அதன் வெளி அமைப்புக்களை அதன் பின்னர் வழிபாடும்வகையிலும் நிறைவு நிரைவு செய்வதனை தான் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷசவிடமிருந்து தனக்கு ஆலோசனை கிடைக்க பெற்றதாக பாதுகாப்பு செயளாளர் தெரிவித்தார்.

சந்தஹிரு சேய நிர்மாண பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் மத்தியில் அதன் முன்னேற்ற செயற்பாடுகள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சில் நேற்று (13) இடம் பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

குறித்த கோபுரத்தின் நிர்மான பணிகள் நிரைவு செய்யப்படுமாயின் நாட்டின் நான்காவது பெரிய தாதுகோபுரமாக அமையும் என்பதாகவும் தான் பதவி ஏற்றதிலிருந்து ஒரு சில காலம் நிறுத்தி வைக்க பட்டிறுந்த அதன் நிர்மான பணிகளின் வேகம் பின்னர் விரைவு படுத்தப்படதாகவும் குறிப்பிட்ட இலக்கை உரிய நேரத்தில் அடைய அதே வேகத்தை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

நிர்மான பணிகள் குறித்த விரிவான அறிக்கையினை சமர்ப்பித்த திட்ட அதிகாரிகள் கடந்த மாதம் இடம் பெற்ற சந்தஹிரு சேய நிர்மாண பணிகளின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடலின் பின்னரான ஒரு மாத காலத்திற்குள் இக் கோபுரத்தின் உச்சத்தில் இரண்டடிக்கு மேல் நிர்மாண பணிகளை முன்னெடுக்க முடிந்ததாக பாதுகாப்பு செயலாளரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சந்தஹிரு சேய திட்டத்தில் தனது செயற்பாடுகள் பற்றி குறிப்பிடுகையில் தாது கோபுரத்தின் நிர்மான பணிக்கான இடத்தை நிர்ணயித்ததுடன் பல பௌத்த தேரர்களுடன் இணைந்து புனித பொக்கிசங்களை நிலை நிறுத்துவதற்கு வேலைத்திட்டங்களை முன்னெடுத்ததில் தான் முதன்மையானவராக திகழ்வதாக பாதுகாப்பு செயலாளர் இங்கு குறிப்பிட்டார்.

சந்தஹிரு சேயாவில் பதிப்பதற்காக ருவன் வெலிசாயவினுடைய அல்லது புனித நகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

மேலும் புனித நகைகள் தாதுகோபுரத்தில் பதியப்படுவதற்கு முன்னர் பொது மக்கள் வணங்கி வழிபடும் வகையில் நாடு முழுவதும் கொண்டு எடுத்துச்செல்லப்படும் எனவும் செயளாளர் குறிப்பிட்டார்.

பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து அகற்றுவதற்காக பாதுகாப்புப் படையினரும் பொலிசாரும் ஆற்றிய உன்னத சேவையைப் பாராட்டும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் சந்தாஹிரு சேய நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. முப்படை மற்றும் சிவில் பாதுகாப்பு படையால் மேற்கொள்ளப்படும் மாபெரும் நிர்மானபணியான இது  285 அடி உயமும் 255 அடி அகலமும் கொண்டது.

இந்த கலந்துரையாடலில் சிரேஷ்ட  விரிவுரையாளர் பேராசிரியர் ரஞ்சித் லியனகே, முப்படை அதிகாரிகள், செயற்திட்ட அதிகாரிகள், கட்டிட வடிவமைப்பாளர்கள் மற்றும் கலைஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கலந்துரையாடலில், வண. எல்லாவல மேதானந்த தேரர், மத்திய கலாச்சார நிதியத்தின் பிரதம பணிப்பாளர், பேராசிரியர் காமினி அதிகாரி, பேராசிரியர் நிஹால் டி சில்வா, பேராசிரியர் பி.பி. மாண்டவல, (வன்னி) தலைமையக கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித்த தர்மசிறி, 21 படை பிரிவிற்கான கட்டளைத்தளபதி,  மேஜர் ஜெனரல் குமார் ஜயபதிரண மற்றும் அரச பொறியியல் துறை அதிகாரிகள் மற்றும் ஏனைய இணை நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.