வெளிவாரியாக உருவாக்கப்படும் கால வரையறை நல்லிணக்க செயல்முறைகளுக்கு பாதிப்பாக அமையும் - ஐ.நா.வில் இலங்கை பிரதிநிதி தெரிவிப்பு
பெப்ரவரி 14, 2020முன்மொழியப்பட்ட குறிக்கோள்களை அடைவதில் வெளிவாரியாக வழங்கப்பட்டுள்ள கால வரையறை நல்லிணக்க செயல்முறைகளுக்கு இடையூறு விளைவிக்கும் ஏனெனில் அவை களநிலை யதார்த்த நிலைக்கு அப்பால் பட்டவை என அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையிடம் தெரிவித்துள்ளது.
'சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் சமாதானத்தை நிலை நிறுத்துதல்: மோதல் மற்றும் மோதலுக்குப் பின்னரான சூழ்நிலைகளின் போதான இடைக்கால நீதி' எனும் தலைப்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் பெப்ரவரி,13 ஆம் திகதியன்று இடம்பெற்ற ஒரு நாள் விவாதத்தின் போது ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியும் தூதுவருமான ஷேணுகா செனவிரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்வாறான இடைக்கால நீதி பொறிமுறைகளின் போது பல்வேறு வரலாற்று, கலாச்சார மற்றும் சமய உணர்வுகள் என்பன கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.