மேல்மாகாண ஆளுநர் அவர்கள் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

ஜனவரி 08, 2019

புதிதாக நியமிக்கப்பட்ட மேல்மாகாண ஆளுநர், திரு. அசாத் சாலி அவர்கள் பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களை வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி,04) சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சிநேகபூர்வ கலந்துரையாடலின்போது, செயலாளர் அவர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட மேல்மாகாண ஆளுநர் அவர்களுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்தார். இதன்போது தேசிய பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திக்கு தனது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக புதிய ஆளுநர் திரு. அசாத் சாலி அவர்கள் உறுதியளித்தார்.

அமைச்சிக்கான தனது விஜயத்தின்போது முஸ்லிம் மத தலைவர்கள் ஒரு குழுவினரும் இணைந்திருந்தனர்.