இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக ஆப்காணிஸ்தான் ஒத்துழைப்பு
பெப்ரவரி 17, 2020தெற்காசிய பிராந்தியத்தில் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை முறியடிக்கும் பொருட்டு இலங்கைக்கு முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு ஆப்கானிஸ்தான் அரசாங்கம் தனது ஒத்துழைப்பினை வழங்கும் என இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர் எம். அஷார்ப் ஹைதரி உறுதியளித்தார்.
ஆப்கானிஸ்தான் தூதுவர் எம். அஷார்ப் ஹைதரிக்கும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவுக்குமிடையில் பாதுகாப்பு அமைச்சில் இன்று (பெப்ரவரி,17) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தெற்காசிய பிராந்திய பாதுகாப்பின் ஒரு முக்கிய தளமாக இலங்கை திகழ்வதால் இரு நாடுகளுக்கிடையே காணப்படும் பாதுகாப்பு மற்றும் அதன் ஒத்துழைப்புக்களை அதிகரிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் ஆப்கானிஸ்தான் தூதுவர் மேலும் தெரிவித்தார்.
"இரு நாடுகளும் பல்வேறு துறைசார் விடயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளதுடன், கலாச்சார உறவுகளை கட்டியெழுப்புதல் மற்றும் சுற்றுலாத்துரையினை மேம்படுத்தல் ஆகிய விடயங்களில் அதிகம் சாத்தியப்பாடுகள் காணப்படுவதால் ஆப்கானிஸ்தான் அரசினால் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு வழங்க முடியும்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதனிடையே பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் குணரத்ன கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பாக குறிப்பிடுகையில் பாதுகாப்பு, வியாபாரம் மற்றும் முதலீடுகளை உள்ளடக்கிய நிறுவனங்களின் செயற்பாடுகளை அதிகரிப்பதுடன், ஏற்கனவே உள்ள உறவுகளை வலுப்படுத்தி இருதரப்பு ஒத்துழைப்புக்களை வழங்கக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் தெற்காசிய பிராந்தியத்தில் காணப்படும் தீவிரவாதப்போக்கு மற்றும் பாரம்பரியமற்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்களினால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு தொடர்பான சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாகவும் இதேன் போது கலந்துரையாடப்பட்டன.