அங்கவீனமுற்ற படையினருக்கான ஓய்வூதிய பிரச்சினைகளை தீர்க்க பாதுகாப்பு அமைச்சு புதிய அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிப்பு

பெப்ரவரி 20, 2020

•    அங்கவீனமுற்ற படைவீரர்கள், குடும்பங்கள் மற்றும் விதவைகளுக்கான ஓய்வூதிய கொடுப்பனவுகள் தொடர்பான  முரண்பாடுகள் தீர்க்கப்படும்  

பொலிஸார் மற்றும் அங்கவீனமுற்ற முப்படையினருக்கான ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு புதிய அமைச்சரவை பத்திரமொன்றை பாதுகாப்பு அமைச்சு விரைவில் சமர்ப்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

அமைச்சின் அதிகாரிகளிடம் தற்போதுள்ள ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகளில் உள்ள நடைமுறை பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான புதிய அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு  பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன கேட்டுக்கொண்டார்.   

"அங்கவீனமுற்ற படைவீரர்கள், குடும்பங்கள் மற்றும் விதவைகளுக்கான ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பாக தற்போதுள்ள நடைமுறை முரண்பாடுகளை நீக்குவது எமது கடமையும் பொறுப்பும்" என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.   

இன்று பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற அவசர சந்திப்பில் கலந்து கொண்டு முப்படை தளபதிகள், உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் மத்தியில் கருத்து தெரிவித்த பாதுகாப்பு செயலாளர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் ஆட்சிக்கு வந்தவுடன் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கபடுவதாக தங்களால் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்ற உறுதியளித்திருந்தனர் எனவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.   

மேலும் முன்னாள் படைவீரர் என்ற வகையில், தான் உரிமைகோருபவர்களிடமும் பரிவு காட்டுவதாகவும், முன்னர் அவர்கள் ஊதியம் கோரியபோது, அவர்களுக்கு ஒரு கொடுப்பனவு வழங்கப்பட்டமை அவர்களது பிரச்சினைக்கு தீர்வாக அமையவில்லை என்பதாகவும், அவர் தெரிவித்தார்.   

அங்கவீனமுற்ற படைவீரர்களின்  ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவு பிரச்சினைகளை தீர்க்கும் முதல் அமைச்சரவை பத்திரம் 2019 மார்ச் 12ஆம் திகதி அனுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து அது ஒரு துணைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதில் நிதி அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் ஓய்வூதிய திணைக்களத்தின் சிரேஷ்ட  அதிகாரிகளும் உள்ளடங்குவர்.   

கடந்த ஆட்சியின் போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாட அங்கவீனமுற்ற படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களினால் கோரப்பட்ட கோரிக்கைகள் மறுக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நிதியமைச்சு ஓய்வூதியக் கொடுப்பனவிற்கு பதிலாக தனியான கொடுப்பனவுகளாக வழங்குவதற்கு ஒப்புதல் அளித்தது. ஓய்வூதியம், கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் தொடர்பான அவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும்” எனவும் பாதுகாப்பு செயலாளர்  குறிப்பிட்டார்.    

"வீதிகளிலும், நடைபாதைகளிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதன் மூலம் போர்வீரர்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய அவர்கள் பிச்சைக்காரர்கள் அல்லர் என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். படை வீரர்களுக்கு ஒரு கண்ணியம் இருப்பதாகவும் தங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்க அரசியல் ரீதியாக ஆர்வமூட்ட  தேவையில்லை எனவும் நியாயமான முறையில்  பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு தீர்வுகளை காணக்கூடிய ஒரு சிறந்த தலைவர் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.   

இதன்பிரகாரம் திருத்தப்பட்ட அமைச்சரவை பத்திரம் நான்கு பிரிவுகளின் கீழ் பிரச்சனைகளை ஆராய உள்ளது: அங்கவீனமுற்ற படைவீரர்கள்  / திருமணமாகாதவர்கள்;  ஊனமுற்ற / திருமணமானவர்;  இறந்த / திருமணமாகாத;  இறந்த / திருமணமானவர்.