சட்டரீதியாக ஆயுதங்களை வைத்திருப்பதற்கான அனுமதிப் பத்திரம் பாதுகாப்பு அமைச்சின் வலைத்தளத்தில்

பெப்ரவரி 20, 2020

அண்மையில் வழங்கப்பட்ட பொதுமன்னிப்புக்  காலத்தில், சட்டரீதியிலான அனுமதிப்பத்திரம்  இல்லாத அல்லது அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கப்படாத சுமார் 200ஆயுதங்கள்,  ஒன்பது மாகாணங்களிளும் உள்ள பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.     

உரிய நேரத்தில் ஆயுதங்களை புதுப்பிப்பது தொடர்பாக முறையான நடைமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்துவதற்கான தேவையினை  இது உணர்த்துகிறது.    

ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு அதற்கான அனுமதிப் பத்திரம் அல்லது புதுப்பித்தல்களை பெறுவதற்காக சந்தர்ப்பம் அவர்கள் ஆயுதங்களை பொலிஸிடம்  ஒப்படைத்த நாளில் இருந்து மூன்று மாதங்கள் வழங்கப்படவுள்ளது.    

ஆயுதங்களுக்கான அனுமதி பத்திரங்களை புதுப்பித்தல் மற்றும் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் பதிவு நடைமுறைகளை மேற்கொள்ளும் வகையில் பல்வேறு தரப்பினரும் கவனம் செலுத்திவருகின்றனர்.

இதன்பிரகாரம் பாதுகாப்பு அமைச்சு தனது உத்தியோகபூர்வ இணையத்தளமான டிபென்ஸ்.எல்கே (defence.lk) இல் விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.    

இலங்கையில் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களை பதிவு செய்தல் மற்றும் ஆயுதங்களை புதுப்பித்தல் ஆகிய நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சின் சிவில் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திப் பிரிவு ஒழுங்குபடுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.    

துப்பாக்கி கட்டளை சட்டத்தின் பிரகாரம், அனுமதி பத்திரம் இல்லாமல் ஆயுதங்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும், எனவே ஆயுதங்களை வைத்திருக்கும் அனைவரும் உரிய அனுமதி பத்திரத்தினை வைத்திருக்க வேண்டும்.   

அனைத்து துப்பாக்கிகளின் அனுமதி பத்திரமும்  ஒவ்வொரு வருடத்தின் டிசம்பர் மாதம் 31திகதி காலாவதியாவதாகவும் எனவே அதற்கு முன்னர் உரிய முறைப்படி புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என பாதுகாப்பு அமைச்சின் சிவில் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி மேம்பாட்டுகான சிரேஷ்ட உதவி செயலாளர் பிரியந்த சுமனசேகரவின் தகவல்களின் பிரகாரம் தெரிவிக்கப்படுகிறது.  

வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு காலத்தின் போது ஆயுதங்களை கையளித்தவர்களுக்கு அதற்கான அனுமதிப் பத்திரம் அல்லது புதுப்பித்தல்களை பெறுவதற்காக சந்தர்ப்பம் அவர்கள் ஆயுதங்களை பொலிஸிடம்  ஒப்படைத்த நாளில் இருந்து மூன்று மாதங்கள் வழங்கப்படவுள்ளது.  

சட்டவிரோத ஆயுதங்களை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்காக வழங்கப்பட்டிருந்த  ஒரு வார  பொது மன்னிப்பு காலம் முடிவடைந்ததையடுத்து, பொலிஸ் மற்றும் ஏனைய புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து  அவற்றை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.   

உரிய நேரத்தில் அனுமதிப்பத்திர புதுப்பித்தல்களை மேற்கொள்ளாதவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் ஆயுதங்களை புதுப்பிப்பதற்கான விண்ணப்ப படிவம்:

விண்ணப்ப படிவங்கள் Download
Application for Renewal of Licence for Pistol / Revolver Issued for Self Defence /Property Protection for the Year 2020 (Sinhala)
Application Form for the Registration of Private Security Agencies 2020 (English)
Application Form for the Registration of Private Security Agencies 2020 - 1(Sinhala)
Application Form for the Registration of Private Security Agencies 2020 - 2(Sinhala)