ஜப்பானிய கடற்படைக் கப்பலான ‘தகனமி’ நாட்டில் இருந்து புறப்படுகிறது

பெப்ரவரி 23, 2020

இம்மாதம்  21 ஆம் திகதி நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வந்த ஜப்பானிய கடற்படைக் கப்பலான “தகனமி” இன்று (பெப்ரவரி, 23) இலங்கையில் இருந்து புறப்பட்டுச்  சென்றது.

புறப்பட்டுச் செல்வதற்கு முன்னர் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு  நிகழ்ச்சிகளில் குறித்த கப்பலின் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  நிகழ்வுகள் இரு நாடுகளின் கடற்படை வீரர்களின் அறிவையும் அனுபவங்களையும் பரிமாறிக் கொள்ள வழி வகுத்தன என  ஜப்பானிய கடற்படை கப்பலின் குழுவினரால் பாராட்டப்பட்டது.

தங்களது மூன்று நாள் சுற்றுப்பயணத்தின் நிகழ்வுகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு இலங்கையில் இருந்து  புறப்பட்ட ஜப்பானிய கப்பலுக்கு, கடற்படை மரபுகளுக்கமைய இலங்கை கடற்படையால் பிரியாவிடையளிக்கப்பட்டு வழியனுப்பிவைக்கப்பட்டது.