தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத பட்டியலில் தொடரும் - மலேசிய உள்துறை அமைச்சர்

பெப்ரவரி 23, 2020

'செயல்படாத பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலை புலிகள் (LTTE) அமைப்பு தடை செய்யப்பட்ட  பயங்கரவாத பட்டியலில் தொடர்ந்து இருக்கும் ' என மலேசிய உள்துறை அமைச்சர் முஹைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.

இந்த கருத்தை வெளியிட்டார், மலேசியாவின் சட்டமா அதிபர் டொம்மி தோமஸ்  தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு பட்டியலை மீளாய்வு செய்யுமாறு  செய்யப்பட்ட  பரிந்துரையை  நிராகரிக்கும் போதே மலேசிய உள்துறை அமைச்சர் முஹைதீன் யாசின் சனிக்கிழமையன்று (பெப்ரவரி 22) மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'இந்தியா, கனடா, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் புலிகளை ஒரு பயங்கரவாதக் குழுவாக தொடர்ந்து பட்டியலிடுகின்றன' என அமைச்சரை மேற்கோள் காட்டி ஸ்ட்ரெய்ட் டைம்ஸ்  பத்திரிகை மேற்கோளிட்டுள்ளது.

மலேசியாவின் ஆளும் கூட்டணியான பக்காத்தான் ஹரப்பனின் ஒரு அங்கமான ஜனநாயக நடவடிக்கைக் கட்சியைச் சேர்ந்த இரண்டு மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 12 நபர்கள் மீதான குற்றச்சாட்டுகளை டான் ஸ்ரீ தோமஸ் சர்ச்சைக்குரிய வகையில் கைவிட்டுள்ள நிலையில்  ஒரு நாள் கழித்து அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

இந்த 12 பேரும் விடுதலைப் புலிகளின் அனுதாபிகள் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதுடன், அவர்கள் போராளிக் குழுவைப் புதுப்பிக்க நிதி திரட்டினார்கள் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

2009ம் ஆண்டு  இலங்கை பாதுகாப்பு  படையினரால் புலி பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டனர்.

திரு தோமஸ்,  தனது 11 பக்க அறிக்கையில், குற்றச்சாட்டுகளை கைவிடுவதற்கான காரணத்தை விளக்கி, மலேசியாவில் வர்த்தமானியினூடாக தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலை மறுஆய்வு செய்ய உள்துறை அமைச்சகத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதற்கு   "நவம்பர் 12, 2014 அன்றிலிருந்து மலேசிய அரசாங்கம் புலிகளை பயங்கரவாதக் குழுவாக பட்டியலிட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் முஹ்யதின் பதிலலித்துள்ளாதாக மலேசியாகினி ஒன்லைன் செய்திகளால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

'அதிகாரிகளிடமிருந்து கிடைத்த அண்மைய  தகவல்களின் அடிப்படையில், தமிழீழ விடுதலை புலிகளின் பட்டியலை ஒரு பயங்கரவாத அமைப்பாக தக்க வைத்துக் கொள்ள வலுவான அடிப்படை இருப்பதாக உள்துறை அமைச்சராக நான் கருதுகிறேன். இந்த குழு பொது ஒழுங்கு மற்றும் தேசிய பாதுகாப்பை அச்சுறுத்தும் ஒரு சித்தாந்தத்தை இன்னும் ஆதரிக்கிறது என நம்பப்படுகிறது,' என  அவர் தெரிவித்தார்.

மேலும் அவர், இக்குழுவின் நடவடிக்கைகள் மற்றும் சித்தாந்தங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளின் பொறுப்பு எனவும் தெரிவித்தார்.

மிழீழ விடுதலை புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடுவது சட்டத்தின் படி உள்துறை அமைச்சரின் கீழ் உள்ளது என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

'உள்துறை அமைச்சரின் அதிகார வரம்பில் தலையிட சட்டத்தின் கீழ் சட்டமா அதிபருக்கு  அதிகாரம் இல்லை' என அவர் தெரிவித்துள்ளார்.