துருக்கிய தூதுவர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

ஜனவரி 09, 2019

துருக்கி தூதுவர் அதிமேதகு திரு. டுன்கா ஒசுஹாடர் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களை திங்களன்று (ஜனவரி, 07) சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது, துருக்கி தூதுவர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர்களுக்கிடையே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.