அங்கவீனம் ஒரு இயலாமை அல்ல
மார்ச் 03, 2020
குருணாகல் மாவட்ட இப்பாகமுவ பகுதியில் வசிக்கும், 48 வயதான மஹிந்த எதிரிசூரிய, கடந்த செப்டம்பரில் ஏறத்தாள 20 நாட்கள் நீடித்த சாகும் வரையிலான உண்ணாவிரத்தில் ஈடுபட்ட பல அங்கவீனமுற்ற யுத்த வீரர்களில் ஒருவர். கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் ஐந்து வீரர்களுடன் தொடங்கிய உண்ணாவிரதம், கடந்த அரசாங்கத்தினால் கருத்தில் கொள்ளப்படாததினால் அது பொதுமக்களின் எதிர்ப்பை மேலும் தீவிரப்படுத்தியது.
|
கடந்த பெப்ரவரி 23ம் திகதி, பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன ஒரு புதிய அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக , அங்கவீனமுற்ற போர் வீரர்கள், குடும்பங்கள் மற்றும் விதவைகளுக்கான ஓய்வூதிய கொடுப்பனவுகளில் தற்போதுள்ள நடைமுறை முரண்பாடுகளை நிவர்த்தி செய்தார். திருத்தப்பட்ட அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக அங்கவீனமுற்றோர் / திருமணமாகாதவர்கள்; அங்கவீனமுற்ற / திருமணமானவர்; இறந்த / திருமணமாகாதவர்; இறந்த / திருமணமானவர் எனும் நான்கு பிரிவுகளின் குறித்த முரண்பாடுகள் ஆராயப்படவுள்ளது. |
அன்று நாங்கள், புறக்கணிக்கப்பட்திருத்த 12 வருடங்களுக்கும் குறைவான சேவையைக் கொண்ட அங்கவீனமுற்ற படை வீரர்கள் சார்பாக எங்களது கோரிக்கைகளை ஜனாதிபதி செயலகத்திற்கு எழுத்துப்பூர்வமாக ஒப்படைக்க முயன்றோம், ஆனால் மிகுந்த அவமதிப்புடன் நடத்தப்பட்டோம். 2016 ஆம் ஆண்டில், சேவை ஓய்வூதியத்தை செலுத்துமாறு நாங்கள் கோரினோம். “எங்கள் சரியான மற்றும் நியாயமான கோரிக்கைகளைப் பெற நாங்கள் சென்ற வழிமுறை இதுதான் “ என எதிரிசூரிய தெரிவித்தார்.
எதிரிசூரிய, 1990ஆம் ஆண்டில் தனது 19வது வயதில் இராணுவத்தின் 2வது இலங்கை தேசிய பாதுகாப்புபடையில் (2SLNG) இணைந்தார். 1992ஆம் ஆண்டில், திருகோணமலையில் உள்ள பாலம்போட்டாரில் பாதை சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, கண்ணிவெடி தாக்குதலுக்கு இலக்கானதால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தினால் அவர், அவரது இரு கைகளையும் கண் பார்வையையும் இழந்தார். அப்போதிருந்து அவர் 3 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தை இராணுவ மருத்துவமனையிலும், ரகமாவில் அமைந்துள்ள அங்கவீனமுற்ற வீரர்களுக்கான குடியிருப்பு பராமரிப்பகமான ‘ரணவீரு செவன’விலும் கழித்தார்.
முந்தைய ஆட்சியின் போது குறித்த பிரச்சினை தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த தீர்வுகளில் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து தற்போதைய அரசாங்கம் 100 நாள் ஆட்சியில் சரியான வழிமுறைகளைக் கொண்ட புத்திசாதூர்யமான தீர்வினை முன்வைத்துள்ளதாக மஹிந்த எதிரிசூரிய தெரிவித்தார். |
2019 ஆம் ஆண்டளவில், அங்கவீனமுற்ற மற்றும் உயிரிழந்த போர் வீரர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவுக்கான தற்போதைய திட்டத்தில் காணப்பட்ட குறைபாடுகளை கண்டறிந்து, தமது கோரிக்கைகளை ஒன்றுசேர்ந்து தெரிவித்தனர்.